
Offers every month
பொதுவான கேள்விகள்
Play Passஸில் சந்தா சேரும்போது, ஒவ்வொரு மாதமும் சிறந்த கேம்களில் பிரத்தியேகச் ச���ுகைகளைப் பெறுவீர்கள், 1,000க்கும் அதிகமான கேம்களுக்கும் ஆப்ஸுக்கும் தனிப் பட்டியலைப் பெறுவீர்கள். பட்டியலில், அனைத்து விளம்பரங்களும் அகற்றப்படுவதோடு ஆப்ஸ் சார்ந்த பர்ச்சேஸ்கள் மற்றும் கட்டணத் தலைப்புகள் அனைத்தும் அன்லாக் செய்யப்படும்.
பட்டியலில் 1000க்கும் மேற்பட்ட கேம்களும் ஆப்ஸும் இருக்கும். கட்டண கேம்களும் ஆப்ஸும் கூடுதல் கட்டணமின்றிக் கிடைக்கும். Play Pass பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து கேம்களுக்கும் ஆப்ஸுக்கும் விளம்பரங்கள் அகற்றப்பட்டு ஆப்ஸ் சார்ந்த பர்ச்சேஸ்கள் அன்லாக் செய்யப்படும். சந்தாதாரர்கள் Play Store ஆப்ஸின் Play Pass பிரிவில் இந்த கேம்களையும் ஆப்ஸையும் கண்டறியலாம் அல்லது Google Play முழுவதிலும் தலைப்புகளில் Play Pass பேட்ஜைப் பார்க்கலாம்.
Play Pass பட்டியலில் இல்லாத குறிப்பிட்ட சில பிரபல கேம்களில் சந்தாதாரர்கள் வாராந்திர ஆஃபர்களைப் பெறுகிறார்கள். கேம் சார்ந்த தள்ளுபடிகளாகவோ குறிப்பிட்ட கேம் சார்ந்தவற்றுக்கான டீல்களாகவோ இந்தப் பிரத்தியேக ஆஃபர்கள் இருக்கலாம். கட்டணமற்ற உபயோகத்தின்போதோ Play Pass பட்டியலில் உள்ள கேம்களுக்கோ ஆஃபர்கள் கிடைக்காது. Google Play Billing பேமெண்ட் முறை மூலம் ஆஃபர்கள் ரிடீம் செய்யப்பட வேண்டும்.
Play Pass பட்டியலில் உள்ள கேம்களோ ஆப்ஸோ உங்களிடம் இருந்தால், விளம்பரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு ஆப்ஸ் சார்ந்த பர்ச்சேஸ்கள் அனைத்தும் அன்லாக் செய்யப்படும்.
குடும்ப லைப்ரரி மூலம், கட்டணம் இல்லாமல் Play Passஸுக்கான அணுகலை அதிகபட்சம் 5 குடும்ப உறுப்பினர்களுடன் குடும்ப நிர்வாகி பகிரலாம். குடும்ப உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் Play Passஸை இயக்க வேண்டும். மாதாந்திர ஆஃபர்களும் பிற பலன்களும் குடும்ப நிர்வாகிக்கு மட்டுமே கிடைக்கும்.